ஈரோடு அருகே சோலார் பகுதியில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுகுழுக் கூட்டம் நடைபெற்றது.
அதில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த 20ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு பணிநிரந்தரம், ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். மேலும், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஆளும்கட்சியினர் தலையீடு, அலுவலர்களின் பழிவாங்கும் நடவடிக்கைப் போக்கினைக் கைவிட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக அனைத்து தொழிற் சங்கத்தினரையும் இணைத்து போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையும் படியுங்க: டாஸ்மாக் ஊழியர்கள் பட்டினிப் போராட்டம்!