ETV Bharat / state

ஒரே நேரத்தில் மூன்று  இடங்களில் விபத்து - காயமின்றி தப்பித்த  பயணிகள் - accident

ஈரோடு: மழை காரணமாக  ஆசனூர் மலைப்பகுதியில் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கண்டெய்னர் லாரி விபத்து
author img

By

Published : May 22, 2019, 2:35 PM IST

சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் இன்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரப்பதம் ஏற்பட்டதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

இந்நிலையில் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே கர்நாடக மாநில அரசு பேருந்துகள் இரண்டும் வளைவில் திரும்பியபோது நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினர். அதே போல் மைசூரில் இருந்து கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று ஆசனூர் அருகே வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சக்கரம் புதைந்து நகர முடியாமல் நின்றது.

மேலும், மைசூர் நோக்கி சென்ற கார் திம்பம் அடுத்துள்ள செம்மண் மேடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வனப்பகுதியில் கவிழ்ந்தது.

ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் விபத்து - காயமின்றி தப்பித்த பயணிகள்

இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு சாலையோரம் கவிழ்ந்த கார், லாரி மீட்கப்பட்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மழை காரணமாக ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் விபத்து ஏற்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கர்நாடக அரசுப் பேருந்துகள் மோதல்: மழை பெய்ததால் கார், கண்டெய்னர் லாரி விபத்து  

;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

TN_ERD_04_21_SATHY_GOVT_BUS_ACCIDENT_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

கர்நாடக அரசுப் பேருந்துகள் மோதல்: மழை பெய்ததால் கார், கண்டெய்னர் லாரி விபத்து

ஆசனூர் அருகே நேருக்குநேர் கர்நாடக அரசு பேருந்துகள் மோதிக்கொண்டதில் பயணிகளுக்கு காயமின்றி தப்பினர்.மழை பெய்ததால் அவ்வழியாக சென்ற கண்டெய்னர் லாரியும் சாலையோர குழியில் சிக்கி விபத்துள்ளானது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  ஈரப்பதம் ஏற்பட்டதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.  சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் நோக்கி சென்ற கார் திம்பம் அடுத்துள்ள செம்மண் மேடு அருகே   கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வனப்பகுதியில் கவிழ்ந்தது. இதேபோல் மைசூரில் இருந்து கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று ஆசனூர் அருகே வளைவில் திரும்பியபோது மழை ஈரத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சக்கரம் புதைந்து நகர முடியாமல் நின்றது. இந்நிலையில் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே கர்நாடக மாநில அரசு பேருந்துகள் இரண்டும் வளைவில் திரும்பியபோது நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மழை காரணமாக ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் விபத்து ஏற்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு சாலையோரம் கவிழ்ந்த கார் மற்றும் லாரி இரண்டும் மீட்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.