ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் சார்பதிவாளர் அலுவலத்தில் பத்திரங்கள் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடமிருந்து அதிகளவில் லஞ்சம் பெறுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் திடீரென சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 60ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக சார்பதிவாளர் சேகரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் உரிய விளக்கம் அளிக்காததால் சார்பதிவாளர் சேகர் மற்றும் அலவலக உதவியாளர் அயத்துல்லா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய விசாரணை மேற்கொண்டனர். மேலும் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்ய உள்ளதாகவும் லஞ்சஒழிப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.