ETV Bharat / state

தலமலை வனப்பகுதியில் ஹாயாகப் படுத்திருந்த புலி! - புலிகளின் நடமாட்டம்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை வனச்சரகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

Tigers movement has increased in the Talamalai forest area erd
Tigers movement
author img

By

Published : Jan 21, 2020, 7:56 AM IST

தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை மற்றும் களக்காடு முண்டந்துறை என நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அதிக பரப்பளவுள்ள வனப்பகுதியை உள்ளடக்கியுள்ளது.

சுமார் 1,411 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்த புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர் என இரண்டு வனக்கோட்டங்களும், சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், விளாமுண்டி, கடம்பூர், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி என 10 வனச்சரகங்களும் உள்ளன.

கடந்த 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு பின் 2011ஆம் ஆண்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் 2013ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் வனத்துறையின் துரித பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

Tigers movement
ஹாயாக படுத்திருந்த புலி

குறிப்பாக பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள மாயாறு ஆற்றுப்படுகை வனப்பகுதி, தெங்குமரஹாடா வனப்பகுதி, தலமலை, கேர்மாளம், ஜீரஹள்ளி மற்றும் பண்ணாரி வனப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் தற்போது கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

தலமலை வனப்பகுதியில் உள்ள திப்புசுல்தான் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டத்தை மலைகிராம மக்கள் பார்த்துள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்பு தலமலை அருகே திப்புசுல்தான் சாலையை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் புலி ஒன்று ஹாயாக படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

சாலையோர வனப்பகுதிகளில் தற்போது புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சாலையில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் என மலைகிராம மக்களிடம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பாரம்பரிய நெல் ரகங்களின் ’காப்பான்’

Intro:Body:tn_erd_03_sathy_tiger_photo_tn10009

தலமலை வனத்தில் ஹாயாக படுத்திருந்த புலி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை வனச்சரகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை மற்றும் களக்காடு முண்டந்துறை என 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன.
இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அதிக பரப்பளவுள்ள வனப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. 1411 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்த புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர் என 2 வனக்கோட்டங்களும், சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், விளாமுண்டி, கடம்பூர், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி என 10 வனச்சரகங்களும் உள்ளன. 2013 ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டபின் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர். குறிப்பாக பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள மாயாறு ஆற்றுப்படுகை வனப்பகுதி, தெங்குமரஹாடா வனப்பகுதி, தலமலை, கேர்மாளம், ஜீரஹள்ளி மற்றும் பண்ணாரி வனப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் உள்ளது. தலமலை வனப்பகுதியில் உள்ள திப்புசுல்தான் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டத்தை மலைகிராம மக்கள் பார்த்துள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு தலமலை அருகே திப்புசுல்தான் சாலையை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் புலி ஒன்று ஹாயாக படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வனச்சாலையோர வனப்பகுதிகளில் தற்போது புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சாலையில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் என மலைகிராம மக்களிடம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.