ஈரோடு அடுத்து கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு போலீசாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி, எஸ்.ஐ மோகனசுந்தரம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, செல்வி என்பவர் வீட்டில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தபோது, அவரது வீட்டில் 3.50 கிலோ கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார், செல்வியைப் பிடித்து, ஈரோடு தெற்கு போலீசில் ஒப்படைத்தனா்.போலீசார் செல்வியை கைது செய்து, அவரிடம் இருந்த 3.50 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், பெருந்துறை ஜே.ஜே. நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக ஜே.ஜே. நகரைச் சேர்ந்த ராஜா என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 80 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் தலைமையில் எஸ்.ஐ. செந்தில்குமார், ஆகியோர் பெருந்துறை முதல் ஈரோடு சாலையில் முருகன் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கவுந்தப்பாடியைச்சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:பாஜக பிடியில் இருந்துவிலகி ராஜினாமா; ஒரே நாளில் எதிர்க்கட்சியுடன் கூட்டுசேர்ந்து முதலமைச்சராகும் நிதிஷ்