ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழ்நாடு - கர்நாடக இடையேயான இச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்நிலையில் மைசூருவிலிருந்து புறப்பட்ட சரக்கு லாரி திம்பம் 3ஆவது வளைவு பாதையில் சென்று கொண்டிருந்த போது, சத்தியமங்கலத்திலிருந்து எதிரே வந்த மற்றொரு சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதனை பின்தொடர்ந்து வந்த மற்றொரு லாரியும் முன் சென்ற லாரி மீது மோதியதில் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டன.
இதில் கொள்ளேகால் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் கால் இடிபாடுகளிடையே சிக்கிக்கொண்டது. இதையடுத்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.
மேலும் பண்ணாரி சோதனைச்சாவடி காவலர் மீட்பு வாகனம் மூலம் விபத்துக்குள்ளான லாரிகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தினால் தமிழ்நாடு - கர்நாகடகா சலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஏழைப் பெண்ணின் திருமணத்தை நடத்திய சமூக ஆர்வலர்கள்!