சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், குன்றி பொம்மராயன் கோயில் அருகே உயிருக்குப் போராடிய நிலையில் 20 வயது பெண் யானை ஒன்று படுத்துக் கிடந்துள்ளது. மாடு மேய்க்கச் சென்ற பழங்குடியின மக்கள் யானை இரு தினங்களாக படுத்திருப்பதைக் கண்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலைப் பரிசோதித்தபோது, அது ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து நடத்திய உடற்கூறாய்வில், யானை குடற்புழு நோயால் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டது. அந்த யானையை அதே இடத்தில் வனத்துறையினர் புதைத்தனர்.
முன்னதாக, கோட்டமாளம் கிராமத்தில், உடல்நலம் பாதித்திருந்த 15 வயது யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதேபோல், குன்றி வனத்தில் யானைகளுக்கு இடையே நடத்த சண்டையில் 25 வயது ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
இதையும் படிங்க: வனத் துறையினரின் ஜீப்பை விரட்டி முட்டித்தள்ளிய காட்டுயானை!