ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி மேற்குக்குட்டிபாளையத்தில் வசித்துவருபவர் செங்கோடன், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர். இவர் தனது உறவினரின் திருமணத்திற்காக வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில், இவர்களது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருப்பதாக வேலையாள் தொலைபேசியில் மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, வீட்டிற்கு விரைந்து வந்த செங்கோடன் அவரது வீட்டினுள் இருந்த ஏழு சவரன் நகை மற்றும் ரூ. 1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பூட்டியிருந்த வீட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.