கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கேரளா, கர்நாடக மாநில எல்லையில் உள்ள தாலுகாக்களில் மக்கள் கூடும் இடங்களான சினிமா திரையரங்கம், சுற்றுலாத்தலம் போன்ற இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இரு மாநில எல்லையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசு உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மூன்று திரையரங்குகள், புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு திரையரங்கு என மொத்தம் நான்கு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் அரசு உத்தரவின்பேரில் மார்ச் 31 வரை காட்சிகள் ரத்து என திரையரங்குகள் முன்பு அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் காட்சி ரத்துசெய்யப்பட்டது தெரியாமல் சில மக்கள் திரையரங்கிற்கு வந்து பூட்டிக்கிடக்கும் திரையரங்கை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இதையும் படிங்க... கரோனா அச்சம்: சவுதி, துபாயில் திரையரங்குகள் மூடல்