ETV Bharat / state

சாலை வசதி செய்து தரும்வரை வாக்களிக்க மாட்டோம்: ஆவேசமடைந்த கிராம மக்கள் - election

ஈரோடு: சாலை வசதி செய்து தரும்வரை வாக்களிக்க மாட்டோம் எனக் கூறி கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

ஆவேசமடைந்த கிராம மக்கள்
author img

By

Published : Apr 17, 2019, 1:58 PM IST

Updated : Apr 17, 2019, 10:25 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூரை அடுத்த மல்லியம்மன் துர்க்கம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு 485 வாக்குகள் உள்ளன.

கடம்பூரில் இருந்து மல்லியம் துர்க்கம் கிராமத்துக்கு செல்ல ஏழு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். வழிநெடுகிலும் கற்கள், முட்புதர்கள் அதிகமாக உள்ளன. சாலையின் இருபுறமும் விலங்குகள் பதுங்கி நின்று தாக்கும் அபாயமும் உள்ளது.

மலைப்பகுதியில் விளையும் காய்கறிகளை கொண்டு செல்லக்கூட பல வருடமாக இக்கிராமத்தில் அடிப்படை சாலை வசதி கிடையாது. மேலும் இது குறித்து பல முறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மல்லியம்மன் துர்க்கம் கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இதனால் ஆவேசமடைந்த மக்கள் நாளை நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் தயாரான நிலையில் உள்ளபோதிலும் ஓட்டுப்போட மாட்டோம் என உறுதியாகக் கூறி தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

Intro:TN_ERD_SATHY__01_17_MALLIAMDURGAM_BYTE_VIS__TN00009

Body: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் அடுத்த மல்லியம்மன் துர்க்கம் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உள்ளன இங்கு 485 வாக்குகள் உள்ளன கடம்பூரில் இருந்து மல்லியம் துர்க்கம் கிராமத்துக்கு செல்ல ஏழு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும் வழிநெடுகிலும் கற்கள் முட்புதர்கள் அதிகமாக உள்ளன சாலையின் இருபுறமும் வனங்கள் பதுங்கி நின்று தாக்குவதால் மனித மோதல் ஏற்படுகிறது மேலும் மலைப்பகுதியில் விளையும் காய்கறி விலை கொண்டு செல்ல போக்குவரத்து வசதியும் கிடையாது இதுகுறித்து கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை அனுப்பிவைத்தனர் ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சாலை வசதி செய்தி தரும் வரை போராட்டம் நிறுத்தப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர் வாக்குப் பெட்டி வந்தபோதிலும் நாங்கள் அதில் ஓட்டு போட மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர் இதுகுறித்த விரிவான செய்தி ஈமெயிலில் உள்ளது

Conclusion:
Last Updated : Apr 17, 2019, 10:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.