ஈரோட்டில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதிகள் அலுவலகத்தை சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர்ராஜன் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு மின்சாரப் பேருந்துகளை இயக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. ஒரு மின்சாரப் பேருந்தின் விலையில் ஆறு சாதரணப் பேருந்துகளை வாங்கமுடியும். டெல்லியில் உள்ளதைபோல எரிவாயுவைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்க அரசு முயற்சிக்க வேண்டும். மின்சாரப் பேருந்துகளை அரசே இயக்கலாம். போக்குவரத்துத் துறை தனியார்மயமாக்குவதை எதிர்க்கிறோம்.
தெலங்கானாவில் 40 ஆயிரம் தொழிலாளர்களின் நீக்கத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர்கள் விரோதபோக்கைக் கண்டித்து வரும் 19ஆம் தேதி விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படும். அலுவலர்களை அடிக்கடி மாற்றம் செய்வதை மாநில அரசு கைவிட வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க:தள்ளிப்போன 'மிக மிக அவசரம்' ரிலீஸ்!