ETV Bharat / state

எம்எல்ஏவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் திடீர் கைது!

ஈரோடு: சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகப் புகார் அளிக்கச் சென்றவர்களை காவல் துறையினர் கைது செய்ததால் ஈரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The Struggle Against a Member of the MLA In Erode

author img

By

Published : Dec 8, 2019, 11:20 AM IST

ஈரோடு மாவட்டம் சுரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வாங்கி கொடுப்பவர். இந்நிலையில், முனுசாமியை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, முனுசாமியை விடுதலை செய்ய வலியுறித்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சிலர் வந்தனர்.

அப்போது, திடீரென பெண்கள் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, 37 பெண்கள் உட்பட 51 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அதன்பின், பெண்களை மட்டும் விடுதலை செய்து 14 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து புகார் அளிக்க வந்தவர்கள் பேசுகையில், ‘மக்களுக்கு பட்டா வாங்கிக் கொடுக்கும் விவகாரத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசுக்கும் முனுசாமிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசும் தமிழ்நாட்டு கழகம் தமிழ்செல்வன்

அதில், சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு முனுசாமியை பட்டியல் இனத்தின் பெயரைக் கூறி இழிவாக பேசியதாகக் கூறப்படுகிறது. காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது சிறையில் அடைப்பது கண்டனத்திற்குரியது எனவும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: செங்கல்பட்டில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 25 பயணிகள் படுகாயம்!

Intro:ஈரோடு ஆனந்த்
டிச07

சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் திடீர் கைது!

சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக புகார் கொடுக்க சென்றவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு முனிசிபல் சத்திரம் பகுதியில் ஆய்வு பணிக்கு சென்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசுக்கும் அதேபகுதியை சேர்ந்த முனுசாமி என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Body:முனுசாமியை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கைது செய்த முனுசாமியை விடுதலை செய்ய வலியுறுத்தியும்,அவரை ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மக்கள் அரசு கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

அப்போது திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 37 பெண்கள் உட்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் இரவில் பெண்களை விடுதலை செய்த போலீசார் மக்கள் அரசு கட்சி மண்டல அமைப்பாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 14 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Conclusion:போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது சிறையில் அடைப்பது கண்டனத்திற்குரியது எனவும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

பேட்டி : தமிழ்செல்வன் - தமிழ்நாட்டு மக்கள்கழகம்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.