ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள திம்பம் பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், கோவையில் இருந்து மைசூருக்கு திம்பம் மலைப்பாதை வழியாக இயற்கை உரங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, சரக்கு லாரி 8ஆவது வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் காயமின்றி உயிர்தப்பினார். இதுகுறித்து ஆசனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: