ETV Bharat / state

4வது நாளாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை..சச்சிதானந்தம் வீட்டில் கிடைத்தது என்ன? - ஐடி ரெய்டு

ஈரோட்டில் டாஸ்மாக் சரக்கு வாகன ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் வீட்டில் 4வது நாளாக நடைபெற்று வந்த வருமான வரித்துறையினர் சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது.

4வது நாளாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு

author img

By

Published : May 30, 2023, 9:06 AM IST

4வது நாளாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு

ஈரோடு: சக்தி நகர் மூன்றாவது வீதியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உறவினர் ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை வைத்து பல்வேறு நிறுவனங்களில் ஒப்பந்தம் பெற்று சரக்குகளை ஏற்றி அனுப்பும் தொழில் செய்து வருகிறார். அந்த வகையில் இவர் மதுபானக் கிடங்குகளில் இருந்து மதுபான பாட்டில்களை பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

சச்சிதானந்தம் மட்டுமே மாநில அளவில் டாஸ்மாக் கிடங்கில் இருந்து மதுபான கடைகளுக்கு விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 200க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களை சொந்தமாக வாங்கியதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது. அதன் அடிப்படையில் ,வருமான வரித்துறையினர் ஈரோட்டில் சச்சிதானந்தம் வீட்டிலும், அவரது செங்கோடம்பாளையம் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டு வந்தனர். திருச்சி மற்றும் கேரள மாநிலத்திலிருந்து வந்திருந்த 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (மே 29) நான்காவது நாளாக சோதனையில் ஈடுபட்டனர்.

சச்சிதானந்தம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செய்து உள்ள முதலீடுகள், வெளி மாநிலங்களில் அவர் செய்து உள்ள முதலீடுகள், லாரி தொழில் தவிர்த்து வேறு ஏதேனும் தொழில் செய்கின்றாரா, அதில் கிடைத்த வருமானம் எவ்வளவு என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சச்சிதானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர், அவருக்கு நெருங்கிய நண்பர்கள் ஆகியோர்களின் வங்கி கணக்கு விவரங்கள், அவர்களது முதலீடுகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் புதிதாக துவங்கி உள்ள தொழில் பற்றிய விபரங்கள் போன்றவற்றையும் விசாரித்தனர்.

மேலும், கணக்கில் காட்டாமல் சச்சிதானந்தம் செய்து உள்ள முதலீடுகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது நாள் சோதனையில் 2.1 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நேற்று நான்காவது நாள் சோதனை நடைபெற்றது.

இதில் வங்கி கணக்குகள் மற்றும் லாக்கர் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் காலையில் சச்சிதானந்தத்தை வெளியே அழைத்துச் சென்றனர். ஆய்வு முடிந்ததும் மாலையில் சச்சிதானந்தத்தை வீட்டில் விட்டுவிட்டு வருமான வரித்துறையினர் புறப்பட்டுச் சென்றனர்.

மேலும், சச்சிதானந்தம் வீட்டில் போடப்பட்டு இருந்த காவல் துறையினரின் பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட்டது. சச்சிதானந்தம் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உரிய விளக்கம் கேட்டு சச்சிதானந்தத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கப்படும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: ‘வருமான வரித்துறைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.