ETV Bharat / state

அரசு அறிவித்தபடி ஊதியம் வழங்குக; அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம் - துப்பரவு பணிகள்

ஈரோட்டில் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் பணியாளர்கள் அரசு அறிவித்தபடி ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அறிவித்தபடி ஊதியம் வழங்க வேண்டும்; அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

author img

By

Published : Nov 24, 2022, 10:38 AM IST

ஈரோடு: அரசு தலைமை மருத்துவமனையில் 132 ஒப்பந்த தொழிலாளர்களும், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் 30 ஒப்பந்த தொழிலாளர்களும், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 22 ஒப்பந்தப் பணியாளர்களும், பவானி அரசு மருத்துவமனையில் 23 ஒப்பந்தப் பணியாளர்களும், குவாலிட்டி பிராப்பர்டி மேனேஜ்மெண்ட் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் ஆண்கள், பெண்கள் என 10- ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகின்றனர்.

இந்த தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் துப்பரவுப் பணிகள், செக்யூரிட்டி பணிகள், நோயாளிகளை அழைத்துச்செல்வது எனப் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு 2022- ம் ஆண்டின் படி அரசு அறிவித்த ஊதியம் நாள் ஒன்றுக்கு 707 ரூபாய் வீதம் மாதம் 21,260 ரூபாய் வழங்கபட வேண்டும்.

ஆனால் அரசு அறிவித்த ஊதியத்தை தராமல் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.9450 ஊதியம் வழங்கி விட்டு அந்த ஊதியத்திலும் ஈஎஸ்ஜ, பிஎஃப் பிடித்தம் என எல்லாம் போக ரூ.8400 ரூபாயை வழங்கி உள்ளனர். ஊதிய உயர்வு மற்றும் போனஸ் தொடர்பாக தொழிலாளர் நல அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தற்போது தூய்மைப் பணிக்கு ரூ.315, பாதுகாவலருக்கு ரூ.285 வழங்கப்பட்டு வரும் நிலையில், இதனை உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அறிவித்தபடி ஊதியம் வழங்க வேண்டும்; அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

இதையும் படிங்க: தமிழர்கள் தான் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.