ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள் மல்லிகைப்பூ சாகுபடி அதிகளவில் செய்துவருகின்றனர். இங்கு விளையும் பூக்கள் கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு தினந்தோறும் மினி வேன்களில் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல, இன்று கர்நாடக மாநிலம் சிக்கொலா அருகே பொம்மநல்லியில் இருந்து சத்தியமங்கலம் பண்ணாரிக்கு சென்டுமல்லி பூ ஏற்றி மினி லாரி ஒன்று சென்றது. அப்போது தாளவாடி பகுதியில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
இதில் ஓட்டுநர் பாரதிராஜா(26) எந்த காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.