சத்தியமங்கலம் நேரு நகரைச் சேர்ந்த எஸ்.கே. சந்துரு என்பவருக்கும், கோவையைச் சேர்ந்த விஜயலட்சுமி கிருத்திகாவுக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்டு, பண்ணாரி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
நடை சாத்தப்பட்ட கோயில் முன் திருமணம்
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பொதுஊரடங்கு அமலில் இருப்பதால், கோயில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மணமக்கள் சந்துரு கிருத்திகாவுக்கு கோயில் முன் திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்கள் முகக்கசவம் அணிந்து கரோனா தடுப்பு நடவடிக்கையை கடைப்பிடித்தனர். இதில் 25 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.