ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி, வடகேரளாவில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் நவம்பர் 8ஆம் தேதி நீர்மட்டம் முழுகொள்ளளவான 105 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருவதால் தொடர்ந்து 21 நாள்களாக அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவுடன் நீடிக்கிறது.
தற்போது சத்தியமங்கலம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையில் இருந்து பவானிஆற்றுக்கும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு மட்டும் விநாடிக்கு 2,200 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீர் மட்டம் 21 நாள்களாக குறையாமல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பவானி அணையிலிருந்து 2ஆம் போகப் பாசனத்திற்கு நீர் திறக்கும் தேதியை அறிவிக்கவேண்டும்!