ETV Bharat / state

ஓடும் ஆம்புலன்ஸில் பழங்குடியின பெண்ணுக்கு ஆண் குழந்தை - trat

ஈரோடு: ஓடும் ஆம்புலன்ஸில் பொண் ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டதில் அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பழங்குடியின பெண்ணுக்கு ஆண்
பழங்குடியின பெண்ணுக்கு ஆண்
author img

By

Published : Jul 20, 2021, 4:22 AM IST

சத்தியமங்கலம் அடுத்த கோட்டமாளம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த மாதவன் லட்சுமி தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு குழந்தை இல்லை. இச்சூழலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு லட்சுமி கருவுற்றார்.

தற்போது 10 மாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடம்பூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர், மருத்துவ உதவியாளர் அஜித்குமார் ஆகியோர் கர்ப்பிணி லட்சுமியை கோட்டமாளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையதில் அனுமதித்தனர்.

அங்கு பிரசவ வலி அதிகமானதால் கர்ப்பிணியை அசவர கால சிகிச்சை பெற கேர்மாளம் வழியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், திம்பம் மலைப்பாதையில் லட்சுமிக்கு ஆம்புலன்ஸில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டதில் லட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து தாயுடன் குழந்தைம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.