ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர் உ.தனியரசு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, ‘பிளக்ஸ் பேனர் பயன்படுத்துவதற்கான தடையினால் அத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆறு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு, கோயில் விழாக்கள் போன்று பல வகைகளில் பயன்படும் பிளக்ஸ் பேனருக்கு தடை விதிக்கக் கூடாது’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், ‘பிளக்ஸ் பேனர் பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது. பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், பள்ளி, கல்லூரிகளில் மதத்தை திணிக்கக் கூடாது. பகவத் கீதை திணிப்பை கைவிட வேண்டும் என்றும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அதிமுக கூட்டணி நூறு சதவீதம் வெற்றி பெறும்’ என்றும் தனியரசு கூறினார்.