ஈரோடு: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்குமார் சேதியா என்பவர், ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் திருச்செங்கோட்டில் டெக்ஸ்டைல் மில் ஒன்றை நடத்தி வரும் நிலையில், வியாபாரத்திற்காக வங்கி மற்றும் தனிப்பட்ட முறையில் சுமார் 20 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்த முடியாததால், மனவேதனையில் இருந்து வந்த ரமேஷ்குமார் சேதியா, நேற்று (டிச.19) வில்லரசம்பட்டி நால்ரோடு அருகில் விஷமாத்திரை சாப்பிட்டு சாலையில் மயங்கி விழுந்து உள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ரமேஷ்குமார் சேதியா, இன்று (டிச.20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து இறந்தவரின் மனைவி ஜோதிதேவி சேதியா அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த வடக்கு காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாரா?.. அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?. என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல: சொந்த காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044 24640050, மாநில தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104 இணைய வழித் தொடர்புக்கு - 022 25521111 மின்னஞ்சல்: help@snehaindia.org நேரில் தொடர்பு கொள்ள: சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட்,11 பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ புரம், சென்னை - 600028.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை தகாத முறையில் திட்டியதாக புகார்.. வருத்தம் தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரி!