ETV Bharat / state

தீபாவளி விற்பனையை எதிர்நோக்கும் ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகள்! - Textile market

ஆறு மாதங்களுக்குப் பின்னர் சந்தை திறக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியால் ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Textile Market
Textile Market
author img

By

Published : Sep 22, 2020, 8:53 PM IST

ஈரோடு : ஈரோடு கடை வீதி பகுதியில் 40 ஆண்டுகள் பழமையான கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. வாரத்தின் திங்கட்கிழமை மதியம் முதல் செவ்வாய்கிழமை மதியம் வரை இந்த ஜவுளி சந்தை செயல்படுகிறது.

சந்தையில் வியாபாரிகளின் அதிகரிப்பால் இடநெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக, ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 ஜவுளி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. அசோகபுரம், நேதாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் நிரந்தக் கடைகள் மற்றும் 2 ஆயிரம் தற்காலிக கடைகளுடன் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது.

இதில் கனி மார்க்கெட் சந்தையில் மட்டும் பொது மக்களுக்கு சில்லறைக்கு துணிகள் விற்கப்படுகின்றன. மற்ற சந்தைகளில் மொத்த வியாபாரம் மட்டுமே நடக்கும். இங்கு வெளிமாநில வியாபாரிகள் வந்து ஜவுளி வாங்கிச் செல்கின்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 25 வாரங்களுக்குப் பின், பகலில் மட்டும் ஜவுளி சந்தையை திறப்பதற்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

தீபாவளி விற்பனையை எதிர்நோக்கும் ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகள்

மாநிலத்திற்குள் செல்ல இ-பாஸ் முறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்களும் ஜவுளிசந்தைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இன்னும் சில வாரங்களில், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால், வியாபாரம் சூடுபிடிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜவுளி வியாபாரி சலீம் தெரிவிக்கையில், 25 வாரங்களுக்குப் பின், ஜவுளி சந்தையை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சாதாரண நாட்களில் வாரத்திற்கு 10 கோடி வரை வியாபாரம் நடக்கும் தற்போது 10 சதவீதம் மட்டுமே வியாபாரம் நடக்கிறது.

இன்னும் சில வாரங்களில் பண்டிகைகள் தொடங்கவிருப்பதால், நல்ல வியாபராம் இருக்கும் என நம்புகிறோம். இ- பாஸ் தளர்வு போல ரயில் போக்குவரத்திற்கும் வகை செய்தால் வெளிமாநில வியாபாரிகள் வந்து செல்ல வசதியாக இருக்கும் என்றார்.

இதையும் படிங்க : தீபாவளிக்கு 5 நாள்கள் விடுமுறை கோரும் பட்டாசு வணிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.