தமிழகம் கர்நாடகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி கோவிலில் தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பின் குண்டம் விழா நடைபெறுவதால் லட்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகம் கர்நாடக இடையே பயணிக்கும் வாகனங்கள் பண்ணாரி திம்பம் வழியாக செல்கின்றன. வரும் 21ம் திங்கள்கிழமை தமிழகம் கர்நாடக பக்தர்கள் குண்டம் இறங்க வருவதால் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இதனால் போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுவதுடன் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பாதல் குண்டம் திருவிழா நடைபெறும் இரு தினங்கள் சரக்கு வாகனங்களுக்கு மாவட்டம் நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
இதன்படி பண்ணாரி வழியாக செல்லும் அனைத்து கனரக சரக்கு வாகனங்கள் திங்கள் கிழமை மாலை 3 மணி முதல் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி வரை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் சரக்கு வாகன ஓட்டிகள் தடை விதிக்கப்பட்ட இரு தினங்கள் பண்ணாரி திம்பம் வழியாக செல்வதை தவிர்க்குமாறு பண்ணாரி கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க :புதிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்