ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி என்ஜிஜிஓ காலனியில் செயல்பட்டு வரும் ஜவுளி நிறுவனத்தில் சுரேந்திரன் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் தருமபுரியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தையல்காரராக பணியாற்றினார்.
இருவருக்கும் வேலைப்பளு குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, சுரேந்திரனை சரமாரியாக தாக்கி கத்தரிக்கோலை வைத்து கழுத்தில் குத்தியுள்ளார். உடனே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சுரேந்திரனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஈரோடு தெற்கு மாவட்ட காவல் துறையினர் மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.