ETV Bharat / state

'ரஜினியை போயஸ் தோட்டத்திற்குள்ளேயே முடக்க முயற்சிக்கிறார்கள்' - தமிழருவி மணியன் - காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்

ஈரோடு: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விரும்பாதவர்கள் அவரை அச்சுறுத்தி போயஸ் தோட்டத்திற்குள் முடக்குவதற்கான வேலையைச் செய்து வருவதாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

Tamilaruvi Manian about Actor Rajinikanth
Tamilaruvi Manian about Actor Rajinikanth
author img

By

Published : Jan 31, 2020, 9:39 AM IST

ஈரோட்டில் தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி நினைவு சொற்பொழிவுக் கூட்டம் நடைபெற்றது. தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்.கே.எம்.மயிலானந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

முன்னதாக தமிழருவி மணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தமிழ்நாட்டிற்கு சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் தேர்தலைச் சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் தயாராக இருக்கிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்று கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். அவர் அரசியலுக்கு வருவதில் இரண்டு கருத்துக்கள் இல்லை.

தமிழருவி மணியன் செய்தியாளர் சந்திப்பு

பெரியார் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதுதான் உண்மை. பெரியார் கருத்து குறித்தோ அவர் சமூக செயல்பாடு நிலை குறித்தோ, அவரது அரசியல் குறித்தோ எதிர்த்தோ அல்லது மறுத்தோ ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்பதையும், தந்தை பெரியார் குறித்து கூறினார் என்று அச்சுறுத்தி அவரை போயஸ் தோட்டத்திக்குள்ளே முடக்கி விடுவதற்கான முயற்சியை சிலர் மேற்கொண்டு வருகின்றார்.

ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார், எப்போது கட்சியை ஆரம்பிப்பார், கட்சியின் பெயர் என்ன, கட்சியின் கொள்கைகள் என்ன என்பதை ரஜினிகாந்தே அறிவிப்பார். அப்போது அனைவரும் தெளிவடைவார்கள். அதுவரை அனைவரும் பொறுத்திருக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘பீனிக்ஸ் பறவை போல் தேமுதிக மக்கள் முன்னாடி வந்து நிற்கும்’

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன30

ரஜினியை போயஸ் தோட்டத்திற்குள்ளேயே முடக்க முயற்சிக்கிறார்கள் - தமிழருவி மணியன்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விரும்பாதவர்கள் அவரை அச்சுறுத்தி போயஸ் தோட்டத்திற்குள்ளாக முடக்குவதற்கான வேலையை செய்து வருவதாகவும், ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியல் களத்திற்கு வருவார் சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் அதனைச் சந்திக்க தயாராக இருப்பதாகவும், என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி நினைவு சொற்பொழிவுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.. தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்.கே.எம்.மயிலானந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்பழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

முன்னதாக தமிழருவி மணியன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்திற்கு வருகிறார் தமிழகத்திற்கு சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் தேர்தலைச் சந்திக்க தயாராக இருக்கிறார் என்றும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்று கேள்விகளை கேட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அவர் அரசியலுக்கு வருவதில் இரண்டு கருத்துக்கள் இல்லை கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வருகிறார் என்று உறுதிபட தெரிவித்த தமிழருவி மணியன் ரஜினிகாந்த் பெரியார் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதுதான் உண்மையென்றும், பெரியார் கருத்து குறித்தோ, அவர் சமூக செயல்பாடு நிலை குறித்தோ,பணிகள் குறித்தோ, அவரது அரசியல் குறித்தோ எதிர்த்தோ அல்லது மறுத்தோ ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்றார்.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்பதையும், தந்தை பெரியார் குறித்து கூறினார் என்று அச்சுறுத்தி அவரை போயஸ் தோட்டத்திக்குள்ளே முடக்கி விடுவதற்கான முயற்சியை சிலர் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

Body:தந்தை பெரியார் குறித்து அவர் ஒரு வாரத்தையும் கூறவில்லை என்கிற உண்மை நிலைப்பாடு தற்போது தெரிந்து ரஜினிகாந்தை எதிர்த்த பெரியாரியவாதிகள் உண்மைConclusion:நிலையை தெரிந்து கொண்டுள்ளதாகவும், ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார், எப்போது கட்சியை ஆரம்பிப்பார், கட்சியின் பெயர் என்ன கட்சியின் கொள்கைகள் என்ன என்பதை ரஜினிகாந்தே அறிவிப்பார் அப்போது அனைவரும் தெளிவடைவார்கள் அதுவரை அனைவரும் பொறுத்திருக்க வேண்டும் என்றும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

பேட்டி : தமிழருவி மணியன் தலைவர்,காந்திய மக்கள் இயக்கம்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.