ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி பகுதியானது தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. கடந்த சில நாள்களாக மாநில எல்லையில் உள்ள கர்நாடக சாம்ராஜ் நகரில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது.
இதனால் தாளவாடி பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் தாளவாடி பகுதிக்கு ஏராளமானோர் வந்துசெல்வதாகப் புகார் எழுந்தது.

இதனையடுத்து வருவாய்த் துறையினர், காவல் துறையினர், மாநில எல்லையில் உள்ள ராமாபுரம், பிசில்வாடி, அருள்வாடி, எத்திகட்டை, குமிட்டாபுரம் சாலையை தகரசீட், கேட் அமைத்து பூட்டினர்.

முக்கியப் பாதையான பாரதிபுரம் சாலையில் மட்டும் சோதனைச்சாவடி அமைத்து அத்தியவசிய பொருள்கள் ஏற்றிவரும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கவும், இ-பாஸ் உள்ள வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதி உள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களைத் தடுக்க ரோந்து பணிகள் தீவிரம்!