ETV Bharat / state

’8 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் காணவில்லை’ - அதிமுக மீது குறிஞ்சி சிவக்குமார் புகார் - erode district news

அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் எட்டு லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் காணவில்லை என தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவக்குமார்

author img

By

Published : Jul 15, 2021, 5:04 PM IST

ஈரோடு : மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வருகை தந்த தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவக்குமார் இன்று (ஜூலை.15) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, "அரசு கேபிள் நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட்ட 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்களில் தற்போது பயன்பாட்டில் 26 லட்சம் பாக்ஸ்கள் மட்டுமே உள்ளன. இரண்டு லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்துள்ளன. மீதமுள்ள எட்டு லட்சம் செட்டாப் பாக்ஸ்களைக் காணவில்லை. கடந்த அதிமுக அரசின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம்.

அதிமுக அரசின் அலட்சியப் போக்கு

காணாமல் போன எட்டு லட்சம் செட்டாப் பாக்ஸ்களை மீட்டு மீண்டும் அரசிடம் ஒப்படைப்போம். தமிழ்நாட்டில் அரசு செட்டாப் பாக்ஸ்கள் முதலிடத்தில் இருந்தன. ஆனால் கடந்த அதிமுக அரசின் அலட்சிய செயல்பாட்டால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முதலிடத்திற்கு கொண்டுவர நடவடிக்கை

அதை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு.

நேற்று (ஜூலை.14) முதல் கட்டணத்துடன் ஒளிபரப்பக் கூடிய விளையாட்டு சேனல்களை இணைத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம். அரசு கேபிள் வயர் அனைத்து இடங்களிலும் உள்ளது. அதனை முறையாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ’அத்தைக்கு மீசை முளைத்தால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்’ - கொங்கு நாடு விவகாரம் குறித்து ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.