ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சுஜல் குட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.
இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்காததால் இலவச வீட்டு மனை மானியம், பிரதமர் வீட்டு திட்டம், அரசின் இதர சலுகைகள் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். தொடர்ந்து பட்டா வழங்கக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட ஒன்றாவது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்யாமல் அப்பகுதியினர் புறக்கணித்துள்ளனர். இதனால் ஒன்றாவது வார்டு காலியாக உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பணப்பயன்கள் வழங்காமல் மோசடி: துப்புரவு பணியாளர்கள் ஆட்சியரிடம் புகார்!