ETV Bharat / state

உணவு பாதுகாப்பு துறை திடீர் ஆய்வு! - inspection in restaurants

தனியார் உணவு விடுதியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் இன்று(ஜூன்.29) திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்ட செய்திகள்
ஈரோடு மாவட்ட செய்திகள்
author img

By

Published : Jun 29, 2021, 11:53 PM IST

ஈரோடு: பிரப் சாலையிலுள்ள தனியார் உணவு விடுதியில் தரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என உணவுப் பாதுகாப்புத் துறையினர் இன்று (ஜுன் 29) ஆய்வு செய்தனர். ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் தங்க விக்னேஷ், உணவுப் பாதுகாப்புதுறையினர் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின் முடிவில் 15 கெட்டுப்போன கோழிக்கறி, பூச்சிகள் அடங்கிய ஐஸ்கிரீம் பெட்டிகள் உள்ளிட்ட பொருள்களையும், காலாவ‌தியான‌ உணவுப் பொருள்களையும் உணவுப் பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர்.

இதைத் தொடர்ந்து இதுபோன்று தரமற்ற உணவுகளை விநியோகித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு விடுதி நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும்,பூச்சிகள் கெட்டுப்போன உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் இதுகுறித்து அந்த உணவு விடுதிக்கு விளக்கம் சமர்ப்பிக்குமாறு அலுவலர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.