ETV Bharat / state

கோபி துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து! - தீ விபத்து

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் மின் சேமிப்பு மற்றும் மின் மாற்றிகள் உள்பட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

fire accident
fire accident
author img

By

Published : Dec 4, 2019, 8:28 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் 110 மின் திறன்கொண்ட துணைமின் நிலையம் செயல்பட்டுவருகிறது.

இந்த துணைமின் நிலையத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் நகர் பகுதிக்கும் நாகவேதன்பாளையம் கொளப்பலூர் மொடச்சூர் வெள்ளாளபாளையம் குள்ளம்பாளையம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் மின் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

இந்த மின் நிலையத்தில் இருந்த உயர் அழுத்த மின் பாதையில் பொருத்தப்பட்டிருந்த மின் சேமிப்பு கருவி வெடித்து சிதறியது அதிலிருந்து மின் விநியோகத்தை சீர் செய்யும் மின் மாற்றியும் தீப்பற்றி எரியத்தொடங்கியது.

கோபி துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து

அதனைப்பார்த்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து மின் தடுப்பு சாதனங்களைகொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமளவென பரவியது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவமால் தடுத்தனர். சிறிதுநேர போரட்டத்திற்குப்பின் தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான மின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மின் சேமிப்பு கருவியில் ஏற்பட்ட உயர் அழுத்தினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் மின் வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தால் கோபிசெட்டிபாளையம் நகர் பகுதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைப்பட்டது. தீ விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:tn_erd_04_sathy_fire_accident_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் திடீர்ரென ஏற்பட்ட தீவிபத்தில் மின் சேமிப்பு மற்றும் மின் மாற்றிகள் உட்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. கோபி தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் 110 மின் திறன்கொண்ட துணைமின் நிலையம் செயல்பட்டுவருகிறது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் நகர் பகுதிக்கும் நாகவேதன்பாளையம் கொளப்பலூர் மொடச்சூர் வெள்ளாளபாளையம் குள்ளம்பாளையம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் மின் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் துணைமின் நிலையத்தில் உரழுத்த மின் பாதையில் பொருத்தப்பட்டிருந்த மின் சேமிப்பு கருவி வெடித்து சிதறியது அதிலிருந்து மின் விநியோகத்தை சீர் செய்யும் மின் மாற்றியும் தீப்பற்றி எரியத்தொடங்கியுள்ளது. அதனைப்பார்த்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து மின் தடுப்பு சாதனங்களைகொண்டு தீயணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமளவென பரவியது தீயை அணைக்க முடியாமல் திணறினர். அதற்கு தகவல் பெற்று விரைந்து வந்த கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத்துறையினர் துரிதகதியில் செயல்பட்டு நுரை கலவையை பயன்படுத்தி தீ மேலும் பரவாமல் தத்ததுடன் சிறிது நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதானல் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான மின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மின் சேமிப்பு கருவியில் ஏற்பட்ட உயரழுத்தினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதி பொதுமக்களிடம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் நகர் பகுதி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.