ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், புதுவடவள்ளி வேடன்நகரில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள அரசுப்பள்ளிகளின் சுவர்களுக்கு வர்ணம் பூசி அழகுப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து வீடு வீடாக சென்று கிராம மக்களிடம் வங்கிக்குச் சென்று பணம் செலுத்தும் படிவம் நிரப்புவது குறித்தும் பணம் எடுப்பது குறித்தும் மக்களிடம் புரியும்படி எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், கிராமங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அகற்றும் பணியில் ஈடுபட்டதோடு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கினர்.
மாணவர்கள், கிராம மக்களுக்கு மருத்துவ சேவை, யோகா பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிராமத்தில் தங்கி சேவை செய்து வரும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் சேவைப்பணிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தொழுநோய் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி