ETV Bharat / state

மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது

ஈரோடு: பதினொன்றாம் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை
மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை
author img

By

Published : Jun 23, 2021, 7:05 PM IST

ஈரோ,டு சாஸ்திரி நகர் விநாயகர்கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணிமாறன் (24). இவர் வீடுகளுக்குச் சென்று உணவு விநியோகம் செய்யும் பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஈரோட்டை சேர்ந்த பதினொன்றாம் படிக்கும் மாணவியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில், கடந்த 14ஆம் தேதி மணிமாறன், ஆசை வார்த்தைகளைக் கூறி மாணவியை கடத்திச் சென்றுள்ளார். தொடர்ந்து இது குறித்து, மாணவியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில், காவல் துறையினர் மணிமாறனையும், மாணவியையும் முன்னதாகத் தேடி வந்தனர். இந்நிலையில், ஈரோடு ரயில் நிலையம் அருகே மாணவியுடன் சுற்றித்திரிந்த மணிமாறனை, மகளிர் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது மாணவியை மணிமாறன் ரயில் மூலம் சேலம் மாவட்டத்திற்கு கடத்திச் சென்றதும், அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து திருமணம் செய்து, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, கடத்தல், போக்சோ சட்டங்களின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மணிமாறனை கைது செய்தனர்.

இதையும் படிங்க: சென்னை மைதானத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.