ETV Bharat / state

கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி நகை பறிப்பு: கொள்ளையர்களுக்கு வலைவீச்சு - கண்ணில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு

ஈரோட்டில் காங்கிரஸ் தலைவரின் மனைவியின் கண்ணில் மிளகாய்ப் பொடித் தூவி, ஐந்தரை பவுன் நகையைப் பறித்துச் சென்ற, அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

robbery in erode jwelery robbery in erode Sprinkle chili powder on the eye and theft erode jwelery robbery issue ஈரோட்டில் நகை திருட்டு மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு கண்ணில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு ஈரோட்டில் கண்ணில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு
நகை பறிப்பு
author img

By

Published : Feb 10, 2022, 10:10 AM IST

ஈரோடு: காங்கிரஸ் கட்சியில் மாவட்டத் தலைவரான ஈ.பி. ரவி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி 16ஆவது வார்டில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அவரது மனைவி புனிதா, சொந்த வேலையாக நேற்று (பிப்ரவரி 9) வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில், திருநகர் காலனி அருகே அவரது இருசக்கர வாகனம் பழுது ஏற்பட்டுள்ளது. அப்போது சாலையோரம் நின்று வண்டியை சரிசெய்ய முயற்சித்துள்ளார்.

அந்நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர், புனிதாவின் கண்ணீல் மிளகாய்ப் பொடி தூவிவிட்டு ஐந்தரை பவுன் தங்க வளையலைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தகுமார், கருங்கல்பாளையம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: இந்து முன்னணித் தலைவரை கொல்ல முயற்சி: 7 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.