ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள பாலப்பாளையம் தோட்டத்தில் சிவராஜ் என்பவர் சோளத்தட்டுக்களை பயிரிட்டுள்ளார்.
அதனை வெட்டுவதற்காக குமரன்காலனியைச் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 17 விவசாயக் கூலி தொழிலாளர்களை தனது மினி சரக்கு ஆட்டோவில் ஏற்றி சென்றுவிட்டு வேலையை முடித்தப் பிறகு மீண்டும் அழைத்து வந்துள்ளார்.
அப்போது குதிரைக்கல்மேடு என்ற இடத்தில் வந்தபோது ஓட்டுநர் சிவராஜின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்திலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் காயம்பட்டவர்களை மீட்டு அவசர ஊரதி மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: லாரி கவிழ்ந்து 4 புதிய ஆட்டோக்கள் சேதம்: சிசிடிவி துணையுடன் போலீசார் விசாரணை!