ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் பண்ணாரி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இளைஞர் பாசறை, தொழிநுட்பப்பிரிவு, மகளிர், இளைஞர்அணி உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய சில நிமிடங்களில் மின் வெட்டு காரணமாக மைக்கில் பேசமுடியவில்லை. சுமார் 1 மணி நேரமாக பேசாமல் இருந்த செங்கோட்டையன் தொண்டர்களுடன் மதிய விருந்து சாப்பிட சென்றுவிட்டார். பின்னர் சாப்பிட்டு வந்த செங்கோட்டையன், மீண்டும் பேச முற்பட்டார். அப்போதும் மின்வெட்டு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்வாரியத்துடன் தொடர்ந்து மின்பாதையை சீரமைத்தனர்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இந்த கூட்டத்தை ஒரு மணி நேரம் கூட நடத்த முடியாமல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லை என கூறமுடியுமா, அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் மின்விநியோகம் சீரான இருந்தது.
அவினாசி அத்திக்கடவு திட்டம் எட்ப்பாடி பழனிசாமியால் கொண்டு வரப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டது. பண்ணாரி ராஜகோபுரம் ரூ.11 கோடி செலவில் கட்டுப்படுவதற்காகு அதிமுக காரணம் என பட்டியிட்டார். அப்போது மீண்டும் கரண்டு கட் ஆனால் கூட்டத்தை பாதிலேயே முடித்துக் கொண்டு சென்றார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!