ETV Bharat / state

நான்கு ஆலைகளின் மின் இணைப்பு கட்; மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 11:00 PM IST

Seal for four company in Perundurai: தொழிற்சாலையின் கழிவு நீரை முறையாக சுத்திகரிக்காமல் நிலத்தில் வெளியேற்றிய நான்கு ஆலைகளின் மின் இணைப்பதை துண்டித்து ஆலைகளுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

Seal for four company in Perundurai Erode District Collector order
நான்கு ஆலைகளின் மின் இணைப்பு கட்

ஈரோடு: பெருந்துறை அருகே அமைந்துள்ளது, சிப்காட் தொழிற்பேட்டை. சுமார் 2,700 ஏக்கர் பரப்பளவில் ஈங்கூர், வரப்பாளையம் காசிப்பில்லாம் பாளையம், எழுதிங்கள் பட்டி, கூத்தம் பாளையம், பனியம்பள்ளி, செங்குளம், பெரிய வெட்டு வா பாளையம், சின்ன வேட்டுவ பாளையம், கடப்பமடை என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வேலை வாய்ப்பு தொழில் வளர்ச்சிக்காக சிப்காட் வளாகம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டது.

இந்த சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் சாய தொழிற்சாலைகள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், மாட்டுத்தீவன தொழிற்சாலை, டயர் தொழிற்சாலை, கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலை, இரும்பு உருக்கு தொழிற்சாலை, தோல் தொழிற்சாலை, எரிவாயு உருளை தயாரிப்பு, குளிர்பதனை கிடங்கு என 250-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

இங்கு செயல்பட்டு வரும் 50-க்கும் மேற்பட்ட சாய, தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு பொதுமக்களும் கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆனது. இந்த நீரை பயன்படுத்திய பொதுமக்கள் புற்று நோய், எலும்பு தேய்மானம், குழந்தை இன்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மனிதர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பகுதியில் உள்ள குளங்களுக்குச் செல்லும் நீர்வழிப் பாதைகளும், குளமும் கழிவு நீரினால் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஆலை நிர்வாகமே பூஜ்ஜியம் முறையில் மறுசுழற்சி செய்து வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஆனாலும் நிலத்தடி நீரில் சாயக் கழிவு நீர் கலந்து வெளியேறி வருவதாக கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அமர்ஜோதி, வித்திய விநாயகா, கதிரி ஓவன்ஸ் என மூன்று சாய தொழிற்சாலைகளும், சென்னை சிலிகேட் என்ற ரசாயன தொழிற்சாலை என நான்கு தொழிற்சாலைகள் கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் ஆலை வளாகத்திலேயே நிலத்தடியில் வெளியேற்றியது உறுதி செய்யப்பட்டது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்காரா நான்கு தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்து தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் சாயக் கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: விபத்தில் காலை இழந்த ஜூடோ வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.