ETV Bharat / state

கேன்வாட்டர் நிறுவனத்திற்கு சீல் - அதிமுக எம்எல்ஏ மீது உரிமையாளர் குற்றச்சாட்டு - கேன்வாட்டர் நிறுவனத்திற்கு சீல்

ஈரோடு: வீரப்பம்பாளையத்தில் உரிய ஆவணங்கள் இல்லை என உதவி ஆணையர் கேன் வாட்டர் நிறுவனத்திற்கு சீல் வைத்தார். ஆனால் அதன் உரிமையாளர் இதற்கு காரணம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கேன்வாட்டர் நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
author img

By

Published : Oct 1, 2019, 7:53 AM IST

ஈரோடு மாவட்டம் வீரப்பம்பாளையத்தில் இயங்கி வந்த கேன் வாட்டர் நிறுவனத்திற்கு சென்ற காவல் துறையினர், உதவி ஆணையர் ஆகியோர் உரிய ஆவணங்கள் இன்றி நிறுவனம் செயல்படுவதாகக் கூறி சீல் வைத்தனர்.

கேன்வாட்டர் நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

ஆனால் அதன் உரிமையாளர் தனது நிறுவனத்திற்கான அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் நிலையில் ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தூண்டுதலால் இச்செயல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டினார்.
இதையும் படிங்க: நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர், குளிர் பானங்களுக்கு தடை

Intro:ஈரோடு ஆனந்த்
செப்.30

கேன் வாட்டர் நிறுவனத்துக்கு சீல் - அதிமுக எம்.எல்.ஏ. தூண்டுதல் என குற்றச்சாட்டு!

ஈரோட்டில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் தூண்டுதலால் கேன்வாட்டர் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டதாக கூறி அதிகாரிகளிடம் கேன் வாட்டர் நிறுவனத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Body:ஈரோடு வீரப்பம்பாளையத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்து விற்பனை நடைபெற்றுவருவதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் ஆய்வு செய்த அதிகாரிகள் இரண்டு கேன் வாட்டர் உற்பத்தி நிறுவனம் மற்றும் 3 ஆழ்துளாய் கிணறுகள் உட்பட 5 இடங்களுக்கு சீல் வைத்தனர்.

தங்களது நிறுவனத்திற்கான அனைத்து ஆவணங்களும் இருக்கும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் தூண்டுதலால் தங்களது நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளதாக நிறுவன உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் தனிநபர் மீது உள்ள விருப்பு வெறுப்பு காரணமாக எங்களது வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Conclusion:மேலும் சீல்வைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டு 5 நிறுவனங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

பேட்டி : ஸ்ரீ காந்தி - கேன் வாட்டர் உற்பத்தி நிறுவன உரிமையாளர்.

அசோக்குமார் - உதவி ஆணையர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.