ஈரோடு: பெருந்துறை அருகே உள்ள பாலக்கரையில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தினமும் இரு மாணவர்கள் வீதம் பிளீச்சிங் பவுடர் கொண்டு கழிவறைகளை தலைமை ஆசிரியை கீதா தூய்மைப்படுத்த வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து பெற்றோர்கள் புகார் அளித்து வந்தனர்.
பெற்றோர் பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் முறையிட்டும் தொடர்ந்து இதே செயலில் ஈடுபடுத்தியதால், குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து தற்போது கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவறைகளை சுத்தம் செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எந்த பாகுபாடுமின்றி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து பாடங்களை நடத்த வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய மின்வாரிய என்ஜினியர்.. 14 ஆண்டுக்குப் பின் மனைவிக்கும் சிறை தண்டனை!