ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அகல்யன் (10). இவர் தனது பெற்றோர் இறந்துவிட்ட காரணத்தால், பாட்டி கமலாவின் பராமரிப்பில் வளர்ந்து, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுவன் தனது நண்பர்களுடன் பவானி ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். இதனையடுத்து, அச்சிறுவனின் சடலம் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் தள்ளி, கொமரபாளையம் ஆற்றுப்படித்துறை அருகே மிதந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டு, உடற்கூறாய்விற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுவன் நீரில் மூழ்கி இறந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்னை: முன்னாள் ரயில்வே ஊழியர் தீக்குளித்து தற்கொலை!