ETV Bharat / state

தொண்டை அடைப்பான் நோய்க்கு சிறப்பு மருத்துவ முகாம் கேட்டு ஆர்ப்பாட்டம்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பகுதிகளில் தொண்டை அடைப்பான் நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அரசு சிறப்பு மருத்துவமுகாம் அமைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Protest
author img

By

Published : Jul 23, 2019, 11:10 AM IST

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரில் மலைப்பகுதியில் மலில்யம்துர்க்கம், சின்னசாலட்டி, அத்தியூர், கல்கடம்பூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொண்டை அடைப்பான் நோயால் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கடந்த வாரம் காசிபிரசாத் என்ற மாணவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்கள் இந்நோய் காரணமாக பள்ளி வருவது குறைந்துவிட்டது.

ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைகளில் இந்நோயால் பாதிக்கப்பட்டு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இந்நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், நோயை கட்டுப்படுத்த சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடம்பூர் பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மலைக்கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கலந்துகொண்டனர்.

Intro:Body:tn_erd_04_sathy_arpattam_vis_tn10009

தொண்டை அடைப்பான் நோயை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம் கோரிக்க ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரில் தொண்டை அடைப்பான் நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அரசு சிறப்பு மருத்துவமுகாம் அமைத்து கட்டுப்படுத்தக் கோரிக ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரில் மலைப்பகுதியில் மலில்யம்துர்க்கம், சின்னசாலட்டி,அத்தியூர், கல்கடம்பூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொண்டை அடைப்பான் நோயால் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கடந்த வாரம் காசிபிரசாத் என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்கள் இந்நோய் காரணமாக பள்ளி வருவது குறைந்துவிட்டது. சத்தியமங்கலம் கோவை அரசு மருத்துவமனைகளில் இந்நோயால் பாதிக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இந்நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், நோயை கட்டுப்படுத்த சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என இந்திய கம்யூ கட்சி சார்பில் கடம்பூர் பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மலைக்கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கலந்துகொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.