சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அடர்ந்த காட்டின் மத்தியில் மாக்கம்பாளையம் அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் கூலித்தொழிலாளர்கள் உள்ளனர். இக்கிராமத்தில் வசித்துவருபவர் சிவப்பா. இவரது மனைவி அமுதா (24) ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் இன்று (டிச.26) அதிகாலை அமுதாவிற்கு பிரசவலி அதிகமானதால், 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்து வரவழைத்தனர். 108 ஆம்புலன்ஸ் பைலட் கோகுலகண்ணன், மருத்துவ உதவியார் பி.தேவராஜ் ஆகியோர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குச் சென்று அமுதாவை ஏற்றி கடம்பூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது குரும்பூர் என்ற இடத்தில் அதிக வலி ஏற்படவே ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் தேவராஜ் பிரவசம் பார்த்தார். அப்போது முதலில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர் மற்றொரு குழந்தை இருப்பதை பார்த்து மருத்துவ உதவியாளர், 22 நிமிடத்துக்கு பின் இரண்டாவது ஆண் குழந்தைக்கும் பிரசவம் பார்த்துள்ளார். இதனையடுத்து சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது இரட்டை குழந்தைகளும் தாயும் நல்ல நிலையில் இருக்கின்றனர். முதல் பிரசவத்தில் 108 ஆம்புலன்ஸில் இரட்டை குழந்தைகள் பிறந்தது இது முதல்முறை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...‘ஸ்கேட்டிங் தளம் அமையுங்கள்...அப்புறம் பாருங்க பதங்கங்கள் குவியும்’ இளம் வீரர்களின் குரலுக்கு செவி மடுக்குமா அரசு?