ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் வெங்காய லாரி கவிழ்ந்து விபத்து -போக்குவரத்து பாதிப்பு!

author img

By

Published : Nov 15, 2019, 11:14 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் வெங்காய மூட்டைகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

lorry accident

சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடியது திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மைசூரிலிருந்து வெங்காய மூட்டைகள் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று உடுமலைப்பேட்டை செல்வதற்காக இன்று காலை 5 மணியளவில் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. 18வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால், லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் சாலை நடுவே சிதறி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியை மேற்கொன்டனர். கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்தினால் பாதிப்படைந்த நகர்ப்புற போக்குவரத்து விரைவில் சீராகும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி

அடிக்கடி திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்து காரணமாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Intro:Body:tn_erd_01_sathy_onion_lorry_abset_vis_tn10009

திம்பம் மலைப்பாதையில் வெங்காய மூட்டைகள் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து. போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய இந்த மலைப்பாதை அமைந்துள்ளது. இம் மலைப்பாதை வழியாக தமிழகம் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வெங்காய மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி ஒன்று உடுமலைப்பேட்டை செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் 18 கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் வெங்காயம் மூட்டைகள் சாலை நடுவே சிதறி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி நகர்ப்புற போக்குவரத்து சீராகும் என போலீசார் தெரிவித்தனர். மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அடிக்கடி திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விபத்து காரணமாக தமிழகம் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.