டெல்லி சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பிய ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மூன்று பேர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதையடுத்து அவர்கள் வசித்த பகுதியைச் சுற்றி அரை கிலோ மீட்டர் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்கு உள்ள 16 வீதிகளில் 6 ஆயிரத்து 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அரசு மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் முறையாக கிடைக்கிறதா? என்பது குறித்து கண்காணிப்புக் குழுவினர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் 1,250 பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைப்பு