சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை ராமர் கோவில் வீதியில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் பெற்றோர் வசித்து வந்துள்ளனர். மயில்சாமி சிறுவயதாக இருக்கும் அவரது பெற்றோர் கோவைக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஆனால் மயில்சாமி குடும்பத்தினரின் குலதெய்வ கோயிலான குருந்தலை ஆண்டவர் கோவிலுக்கு மயில்சாமி அடிக்கடி வந்து செல்வார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சத்தியமங்கலம் வந்த மயில்சாமி உறவினர்களைப் பார்த்து நலம் விசாரித்துள்ளார். அப்போது மயில்சாமியின் அத்தையிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்த போது அப்பகுதி சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். குல தெய்வத்தின் மீது மிகுந்த பக்திகொண்ட மயில்சாமி, கோபிசெட்டிபாளையம் பகுதியில் சினிமா சூட்டிங் நடந்தால் தவறாமல் குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

மயில்சாமி மறைந்த செய்தி கேட்டு தொறையர் நலச் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் மயில்சாமி படத்துக்கு மாலை அணிவித்து இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.