ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் தேசிய சாலையில், பண்ணாரி அம்மன் கோயில் முதல் காரப்பள்ளம் சோதனைச்சாவடி வரை சாலையின் இருபுறமும் உள்ள வனப்பகுதியில் இலந்தை மரங்கள் அதிகளவில் உள்ளன.
வனப்பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக காய்ந்து கிடந்த மரங்கள் துளிர்விட்டு பசுமையாகக் காட்சியளிக்கின்றன. மேலும், இலந்தை மரங்களில் காய்கள் பிடித்துள்ளன.
கரடிக்குப் பிடித்த உணவான இலந்தைப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் இறங்க வேண்டாம் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கல் விளைச்சல் அமோகம்... ஆனால் விலை இல்லையே? வருத்தத்தில் விவசாயிகள்!