ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் நக்சல் பிரிவு காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது காவலர்கள் ராக்கி செல்வகுமார், முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சந்தேகப்படும்படி திரியும் நபர்கள் குறித்து விசாரித்துவந்தனர்.
இந்நிலையில், அந்தியூர் காளிதால் காலனி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சத்தியராஜ் என்பவரைப் பிடித்து விசாரித்ததோடு, அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல்செய்து அந்தியூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நடத்திய சோதனையில், அந்தியூர் தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மளிகைக்கடையில் சட்டவிரோதமாக மறைத்துவைத்திருந்த 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்களைப் பறிமுதல்செய்து அந்தியூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தற்போது இவர்கள் இருவர் மீதும் அந்தியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் பறிமுதல்!