ETV Bharat / state

வனத் துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தை! - Erode Leopard Caught

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே நீண்ட நாள்களாக கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

ஈரோடு சிறுத்தை கூண்டில் சிக்கியது  சிறுத்தை  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்  Leopard caught  Erode Leopard Caught  Sathiyamangalam Leopard Caught
Leopard caught
author img

By

Published : Apr 17, 2020, 12:52 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சிறுத்தைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி அருகேயுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக் கொல்வது தொடர்கதையாக உள்ளது. இதைத் தொடர்ந்து, பெரியகுளம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக சிறுத்தை விவசாய தோட்டங்களில் நடமாடுவதோடு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொன்றது.

அதேபோல் கடந்த வாரம் குப்புசாமி என்பவரது விவசாய தோட்டத்தில் சிறுத்தை புகுந்து ஆடு ஒன்றை அடித்து இழுத்துச் செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. இதையடுத்து, வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியில் கூண்டுவைத்தனர்.

கூண்டில் சிக்கிய சிறுத்தை

இந்நிலையில், இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள பெருமாள் என்பவரது தோட்டத்தில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வனத் துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை மீட்டு வனப்பகுதியில் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், "வனத் துறை கால்நடை மருத்துவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பின்னர் தெங்குமரஹடா வனப்பகுதியில் கொண்டுசென்று விடப்படும்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வலையில் சிக்கிய சிறுத்தை: மீட்டெடுத்த வனத் துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.