ETV Bharat / state

'சிறப்பு ஊதியம் வழங்குக' : தூய்மை காவலர்கள் காத்திருப்பு போராட்டம் - wastage management system

ஈரோடு: கரோனா கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை காவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தூய்மை காவலர்கள்

author img

By

Published : Oct 29, 2020, 10:10 AM IST

தமிழ்நாட்டில் வீடுகள், வியாபார நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாகப் பிரித்தெடுத்து அவற்றை உரங்களாக்கும் பணியில் ஈடுபடுவதற்காக மாநிலம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், கரோனா காலத்தில் துப்புரவு பணிகளையும் மேற்கொண்டனர்.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதுமுள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, குப்பைகளை உரங்களாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள 400க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் ஆயிரத்து 961 தூய்மைக் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூசி சங்கத்தின் சார்பில் தூய்மை காவலர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றிடும் தூய்மை காவலர்களின் காத்திருப்பு போராட்டம் சம்பத்நகர் பகுதியில் நடைபெற்றது. இதை திருப்பூர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன், அ.கணேசமூர்த்தி ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

அப்போது, தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி தூய்மை காவலர்களூக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அறிவித்த மாதத்திலிருந்து நடப்பு மாதம் வரை ஊதிய உயர்வு தொகை வழங்க வேண்டும், கரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை காவலர்களுக்கு இரண்டு மாத சிறப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் தூய்மை காவலர்கள் மனு அளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.