ETV Bharat / state

சாலை அகலப்படுத்தும் பணிகள் மீண்டும் தொடக்கம் - Tamil latest news

ஈரோடு: கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்ககப்பட்ட ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி மீண்டும் தொடங்கியது.

road widening work
road widening work
author img

By

Published : Jun 4, 2020, 10:43 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி உள்கோட்ட பகுதியில் நெடுஞ்சாலைகளில் உயர்மட்ட பாலம் கட்டுதல், சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. கரோனா நோய் பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டது.

தற்போது ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், தாளவாடி உட்கோட்டத்தில் சாலை அகலப்படுத்தும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. தாளவாடி வனப்பகுதி சிக்ஹள்ளி முதல் திம்பம் வரையில் ரூ.80 லட்சம் மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணியும், சத்தியமங்கலத்தில் இருந்து கொத்தம்ங்கலம் சாலையில் உள்ள அபாயகரமான வளைவுகளை நீக்கி போக்குவரத்துக்கு ஏற்றவகையில் சாலை அகலப்படுத்தவம், முடுக்கன்துறை முதல் தொட்டம்பாளையம் வரை அகலபடுத்துவதென மொத்தம் ரூ.7 கோடி செலவில் சாலை அகலப்படுத்துதல், சாலை சீரமைத்தல், பாலம் கட்டுதல் போன்ற பணிகள் தொடங்கப்பட்டன.

இப்பணியில் ஈடுபாட்டிருப்பவர்களிடம் நோய் தொற்று பரவலைத் தடுப்பதற்கு முகக்கசவம், தகுந்த இடைவெளி என அனைத்து கட்டுப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.