தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் கரோனோ பெருந்தொற்று பரிசோதனை செய்யும் ரேபிட் சோதனைக் கருவி சுமார் 1500 வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு பிராமண பெரிய அக்ரஹாரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபிட் கிட் பரிசோதனை இன்று நடத்தப்பட்டது.
இதனை ஆட்சியர் கதிரவன், காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ், சட்டப்பேரவை உறுப்பினர் தென்னரசு ஆகியோர் தொடங்கிவைத்ததுடன், பொது மக்களுக்கு எடுக்கப்படும் ரேபிட் பரிசோதனையையும் ஆய்வுசெய்தனர்.
பின்னர் ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு மாவட்டத்தில் வெளியில் வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், இல்லை என்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாகத் தெரிவித்தவர். தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக ரேபிட் பரிசோதனை நடைபெற்றுவருவதாகவும் ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சரவை இல்லாமல் இயங்கும் மாநிலம்: குடியரசுத் தலைவருக்கு கபில் சிபல் கடிதம்